CLASS – 10 TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)

CLASS – 10 TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)

பாடத் தலைப்பு : திருப்புதல் மற்றும் முதல் அலகுத் தேர்வு

நாள் : 25.07.2022 முதல் 26.07.2022 வரை – திருப்புதல்

நாள் : 27.07.2022 முதல் 29.07.2022 வரை – முதல் அலகுத் தேர்வு

திருப்புதல் வினாக்கள்:   

1.   விடைக்கேற்ற வினாவினை அமைக்க.

அ. ”நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்கிறார் மாகாக்கவி பாரதியார்.

ஆ. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.

2.   தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் நான்கினை எழுதுக.

3. மண்ணும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ

      வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெரும் காப்பியங்களைத்  தவிர    

       எஞ்சியுள்ள      காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

4. ஒரு தாற்றில் பல சீப்பு  வாழைப்பழங்கள் உள்ளன.

      ஒரு சீப்பில் பல தாறு  வாழைப்பழங்கள் உள்ளன.

      ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.  –  மேற்கண்ட தொடர்களில் தவறான   

      தொடரினைச்  சுட்டிக்காட்டி,  பிழைக்கான காரணத்தை எழுதுக.

5. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.

6. அகராதியைக் கண்டு பொருள் எழுதுக.

அடவி                              –              

பழனம்                             –              

7. ’புளியங்கன்று  ஆழமாக நடப்பட்டுள்ளது’. – இதுப்போல் இளம் பயிர் வகை ஐந்தின்   

       பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

8. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

9. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக

10. வினைமுற்றுறை வினையாலணையும் பெயராக மாற்றிக் தொடர்களை 

      இணைத்து  எழுதுக.

          அ)  கலையரங்கத்தில் எனக்காக காத்து இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

   ஆ) ஊட்ட மிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

    இ)  நேற்று என்னை சந்தித்தார். அவர் என் நண்பர்.

11. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

      என்பரியும் ஏதிலான் துப்பு     – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

12.  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்

         பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு

         ஒன்றை உருவாக்குக.

13.தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும்

       தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக. (அல்லது)

       14. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத்   தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின்  சிறப்புப் பற்றி உரையாடுதல். 

15. குமரிக்கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் 

        கொண்ட தென்னவர்  திருநாட்டிற்குப் புகழ்த்தேடித்தந்த பெருமை, தகைசால்

        தமிழன்னையைச்     சாரும்.  எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும்

       அவ்வன்னைக்குச்  பிள்ளைத்தமிழ் பேசி,    சதகம் சமைத்து,    பரணி பாடி, கலம்பகம்

       கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து  

       சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக   

       மகிழ்ந்தனர் செந்நாப்புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர்

       வளர்த்த  தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.

16.   விடைக்கேற்ற வினாவினை அமைக்க.

அ. திருமூலர் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து 

        வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆ. காற்று, பருவக்காலங்களில் மேகத்தைச் சுமந்துவந்து மழையைத் தரும்.

17.   நமக்கு உயிர் காற்று

        காற்றுக்கு வரம் மரம்

        மரங்களை வெட்டி எறியாமல்

        நட்டு வளர்ப்போம்  – இத்தொடர்களைப் போலவே   உலக காற்று நாள்  

        விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்கள் எழுதுக.

18.  வசன கவிதை குறிப்பு தருக.

19. தண்ணீர் குடி,  தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக ;  

     தொடரில் அமைக்க.

20. பகுபத உறுப்பிலக்கணம்  தருக.                   வாழ்ந்த

21. கலைச்சொற்கள் தருக.

Storm                                               –              

 Land breeze                               –              

22. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில்    

      நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… .. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்   

      பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றி பேசினால் கற்பனையில்      

      தலைப்புகளை எழுதுக.

23. காற்று மாசுபடும் விதம் குறித்து கேட்கிறதா என்குறல் பாடம் வழிநின்று விளக்குக.

24. மாகாக்கவி பாரதியார் பற்றி குறிப்பு வரைக.

25.’ சிறுதாம்பு தொடுத்த’ எனத்தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலைப் பிழையின்றி 

      எழுதுக.                                                                   

26. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத்

       தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் 

       சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில் அமைந்துள்ள தொகைச்   

       சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,  விவரித்து எழுதுக.

27. அன்மொழித்தொகையினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

28.  முல்லைப் பாட்டில்  உள்ள  கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

 29.  மொழிபெயக்க.

The golden sun gets up early in the morning and stars it bright rays to fade         

         away the dark.  The milky clouds start their bantering wandering. The colourful  

          birds start twitting their morning melodies in percussion. The cute butterflies

          dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze

         gently blows  everywhere and makes everything pleasant.

30.புயலிலே ஒரு தோணி கதையினைக் கருப்பொருள் சிதையாமல் எழுதுக

31. மாநில அளவில் நடைபெற்ற’ மரம் இயற்கையின் வரம்’ என்னும் தலைப்பிலான  

        கட்டுரைப்  போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு  பெற்ற தோழனை வாழ்த்தி 

        மடல் எழுதுக.

      32.  மலர்ந்தும் மலராத பாதிமலர் போல்

                வளரும் விழி வண்ணமே – வந்து

       விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

                விளைந்த கலை அன்னமே

       நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

                நடந்த இளந் தென்றலே – வளர்

       பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த  தமிழ் மன்றமே.   

                                             – கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை   நயத்தையும் பாராட்டி  உரைசெய்க. 

33.   நச்சப் படாதாவன் செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப்  பொருள்

       தருக.

34. விருந்தினரை மகிழ்வித்துக்  கூறும் முகமன் சொற்களை எழுதுக.

35   தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை

               உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது   

              இலக்கிய செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா?   

              உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

36. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் 

              தொடரும் பயனிலைகள் யாவை?

37. கலைச்சொல் அறிக.

      அ) Classical literature   –

      ஆ) Epic  literature                           –

38. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

       மலை, மாலை

39. புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும்  அதில் 

தலை வைக்க திண்டும் அமைத்தனர்.திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும்                                 புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படி காலமாற்றம்,  தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

40. முல்லை நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்தும் கிடைக்கும் உணவு

               பொருள்கள் யாவை?

41. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக்  கூத்தராற்றுப்படை எவ்வாறு    

              காட்டுகிறது

42. ’கண்ணே கண்ணுறங்கு

                காலையில் நீ எழும்பு

                மாமழை பெய்கையிலே

                பாடினேன் தாலாட்டு

               ஆடி ஆடி ஓய்ந்துறங்கு’ – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை 

               எழுதுக.

43. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

               கோலொடு நின்றான் இரவு – இக்குறளின் பயின்றுவரும் அணியினைச் சுட்டி   

               விளக்கம்   தருக.                                 

44.  ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப்  புலவர்களையும் கலைஞர்களையும்     

        வள்ளல்களை   நோக்கி நெறிபடுத்துவதாக  இருந்தது.  அது  இன்றைய நிலையில் ஒரு     

       வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

45.  உங்கள் இல்லத்துக்கு  வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற  

                விவரித்து எழுதுக.

46.அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள

                 பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதையின் வாயிலாக விளக்குக.

47.  உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும்

                இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் 

                எழுதுக.

48. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

49. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. செயற்கை நுண்ணறிவுக் கருவியான வாட்சன், சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுப்பிடித்தது.

ஆ. இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளுக்கு வேர்டுஸ்மித் என்று பெயர்.

50. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

51. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர் குறித்து எழுதுக.

52. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க.

அ. சிறு-சீறு. ஆ. விதி – வீதி

53. கலைச்சொல் தருக.

Biotechnology,

Space Technology

54. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

( கற்றல், கரு. பூவில் )

அ. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ———-

ஆ. மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது ———–

55. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

56. பகுபத உறுப்பிலக்கணம் தருக. கிளர்ந்த

57. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

58.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

59. வழாநிலை வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

60. அலகிட்டு வாய்பாடு எழுதுக.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

61. உயிர்கள் தோன்றி நிலைபெற்ற நிகழ்வை பரிபாடல் வழிநின்று கூறுக.

62. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி; திறன்பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை; காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்; எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்க்கும் தோழி. இவர்கள் எந்தநேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியலிடுக.

63. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஓட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

64. “விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

65. “வாளால் அறுத்துச் ” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்.

Leave a Comment