CLASS 6 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)
தலைப்பு :
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
பாடத்தின் தன்மை :
- இயற்னையின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
- இயற்கையின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள் :
- சிலப்பதிகாரம் மூல நூல்
- விளக்கப்படம்
- மின்அட்டை
- பாரதியார் கவிதைகள் : நூல்
- காட்சிப்படம்
பாட அறிமுகம் :
- சிலப்பதிகாரம் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- பாரதியார் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாரதியார் வாழ்க்கை வரலாற்றினைச் சொல்லி பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- சந்த நயத்தோடு வாசித்தல்
மனவரைபடம் : சிலப்பதிகாரம்
மனவரைபடம் : காணி நிலம்
தொகுத்தல் : சிலப்பதிகாரம்
- நிலா, கதிரவன், மழை ஆகியவற்றைப் போற்றுதல் முறையில் இளங்கோவடிகள் சிலப்பதிகார வாழ்த்தை அமைத்துள்ளார்.
- உலகத்திற்குச் சோழன் அருள் பொழிதல் போல மழையும் பொழிவதால் மழையைப் போற்றுவோம்.
- சோழன் வெண்குடை போல குளிர்ச்சியைத் தருவதால் நிலாவைப் போற்றுவோம்.
- சோழனின் ஆணைச் சக்கரம் இமய மலையைச் சுற்றி வருவதால் கதிரவனைப் போற்றுவோம்.
தொகுத்தல் : காணி நிலம்
- காணி நிலம் வேண்டும் . அதன் அருகில் அழகான தூண்கள் மற்றும் மாட மாளிகைகள் வேண்டும்.
- நல்ல நீர் உடைய கிணறு வேண்டும்.
- இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.
- முத்து போன்ற நிலவு ஒளி வேண்டும்.
- இனிய குயிலின் ஓசை வேண்டும்.
- உள்ளம் மகிழும் படி தென்றல் காற்று தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகின்றார்.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- இயற்கைக் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
- பாரதியாரின் பிற பாடல்களை ஒலிப்பெருக்கி பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள்:
- இளங்கோவடிகள் மழையை ஏன் போற்றுகிறார்?
- இளங்கோவடிகள் நிலாவை ஏன் போற்றுகிறார்?
- இளங்கோவடிகள் கதிரவனை ஏன் போற்றுகிறார்?
- காணி நிலம் வேண்டும் என்று விரும்பியவர் யார்?
- பாடலில் உள்ள மோனைச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறுக?
- பாரதியார் வேண்டுவன யாவை?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல், பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- இயற்கைச் சிறப்பினை பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- இயற்கைச் சூழலில் வீடு அமைய வேண்டும் என்பதை பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- நிலா, மழை, கதிரவன் பற்றிய கவிதைகளை எழுதி வரச் சொல்லுதல், இயற்கை சார்ந்த பிற கவிஞர்களின் கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.
- பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரச் சொல்லுதல், பாரதியாரின் பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.