CLASS -6  TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)

CLASS -6  TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)

பாடத் தலைப்பு :

இயல் – 2 உரைநடை உலகம் – சிறகின் ஓசை

பாடத்தின் தன்மை :

பறவைகள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

உரைப்பத்தியைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.

துணைக் கருவிகள் :

பொருத்தட்டை

விளக்கப்படம்

பறவைகளின் மாதிரி உருவங்கள்

பாட அறிமுகம் :

பறவைகள் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

புதிய சொற்களை அடிக்கோடிடல்

அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

மையக்கருத்தை அறிதல் வாசித்தல்

மனவரைபடம் :

தொகுத்தல் :

பறவைகள் இடம்பெயர்தல் நிகழக் காரணம் உணவு, இருப்பிடம், தட்பவெப்ப மாற்றம், இனப்பெருக்கம் ஆகியவை ஆகும்.

வலசைபோதல் நிகழ்வால் பறவைகளுக்கு ஏற்படும் மாற்றம் தலையில் சிறகு வளர்தல், இறகு நிறம் மாறல், உடலில் கற்றையாக முடி வளர்தல் ஆகும்.

சிட்டுக்குருவி வெகுவாக அழிந்து வரும் இனம். கூடு கட்டி வாழும். இமய மலையில் 4000 மீட்டர் வரை கூட இவை வாழும். தானியம், புழு, பூச்சி, தேன் ஆகியவற்றை உண்ணும். 10 முதல் 13 ஆண்டுகள் இவற்றின் வாழ்நாள் காலம் ஆகும்

வழங்குதல் :

மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

மடிகணினி மூலம் பறவைகளின் நிலையைப் பற்றிய குறும்படங்களைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு

மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள்:

1. பறவைகள் இடம்பெயரக் காரணம் யாது?

2. வலசைபோகும் போது பறவைகளுக்கு நிகழும் மாற்றங்கள் யாது?

3. சிட்டுக்குருவியின் வாழ்க்கை முறை யாது?

குறைதீர் கற்பித்தல் :

மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

சொல்வதை எழுதுதல்,

பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

பறவைகளின் வாழ்க்கை முறையையும், சீட்டுக்குருவியின் இன்றைய நிலையையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

உனக்குத் தெரிந்த பறவைகளின் பெயர்களைப் பட்டியலிட்டு வரச் சொல்லுதல், ஏதேனும் ஒரு பறவை வாழ்க்கை முறை பற்றி அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.

Leave a Comment