CLASS 7 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)
தலைப்பு :
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
பாடத்தின் தன்மை :
- காட்டின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
- நாவல் மரத்தின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக்கருவிகள் :
- கவிதைகள் மூல நூல்
- விளக்கப்படம்
- மின்அட்டை
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம் :நூல்
- காட்சிப்படம்
பாட அறிமுகம் :
- காடு குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- நாவல் மரம் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- சந்த நயத்தோடு வாசித்தல்
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
மனவரைபடம் : காடு

மனவரைபடம் : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

தொகுத்தல் : காடு
- காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும். > எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
- காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.
- பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.நரிக் கூட்டம் ஊளையிடும்.
- மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
- இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.
தொகுத்தல் : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.
- அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
- பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
- காக்கை,குருவி,மைனா,பெயரறியாப் பறவைகள்,அணில்,காற்று ஆகியன உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
- தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.
- இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
- அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- காட்டின் காட்சிகளை மடிகணினியில் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
- இயற்கை சார்ந்த பிற பாடல்களை ஒலிபெருக்கி மூலம் பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள்:
- குளிர்ந்த நிழல் தருவது எது?
- நடனமாடுவது எது?
- சுரதாவின் இயற்பெயர் யாது?
- நாவல் மரம் எத்தனை தலைமுறையாக இங்கு நிற்கின்றது?
- பாடலில் உள்ள மோனைச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறுக?
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம். அது எந்த மரம்?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல்
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- மரத்தின் சிறப்பினை பாடல் வழி மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
- நாவல் மரத்தின் பெருமைகளை இப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- காடு மற்றும் பற்றிய கவிதைகளை எழுதி வரச் சொல்லுதல், காடு சார்ந்த பிற கவிஞர்களின் கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.
- ராஜமார்த்தாண்டன் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரச் சொல்லுதல், ராஜமார்த்தாண்டன் பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.