CLASS – 7 TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)
பாடத்தலைப்பு :
இயல் 2 – உரைநடை உலகம் – விலங்குகள் உலகம்
பாடத்தின் தன்மை :
விலங்குகள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
உரைப்பத்தியைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
துணைக் கருவிகள் :
பொருத்தட்டை
விளக்கப்படம்
பறவைகளின்
மாதிரி உருவங்கள்
பாட அறிமுகம் :
விலங்குகள் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
புதிய சொற்களை அடிக்கோடிடல்
அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
மையக்கருத்தை அறிதல்
வாசித்தல் :
மனவரைபடம் :
தொகுத்தல் :
யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.யானைகள் செல்லும் வழிப்பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடும் போது, அவர்களைத் தாக்குகின்றன.மேலும் யானைக்குக் கண்பார்வைக் குறைவு, கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ளது. பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி “அனைத்துண்ணி” என அழைக்கப்படுகின்றது. புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குச் செல்லாது. கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரை பெற்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து அனுப்பிவிடும்.
வழங்குதல் :
மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
மடிகணினி மூலம் விலங்குகளின் நிலையைப் பற்றிய குறும்படங்களைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள்:
1. பறவைகள் இடம்பெயரக் காரணம் யாது?
2. வலசைபோகும் போது பறவைகளுக்கு நிகழும் மாற்றங்கள் யாது?
3. சிட்டுக்குருவியின் வாழ்க்கை முறை யாது?
குறைதீர் கற்பித்தல் :
மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
சொல்வதை எழுதுதல், பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
விலங்குகளின் வாழ்க்கை முறையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
உனக்குத் தெரிந்த விலங்குகளின் வாழ்க்கை முறையைப் பட்டியலிட்டு வரச் சொல்லுதல், ஏதேனும் ஒரு விலங்குகள் சரணாலயம் பற்றி அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.