CLASS 8 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)

CLASS 8 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)

தலைப்பு :  

  • ஓடை
  • கோணக்காத்துப் பாட்டு

பாடத்தின் தன்மை :

  • ஓடையின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
  • நாவல் மரத்தின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள் :

  • தொடுவானம் கவிதை நூல்
  • விளக்கப்படம்
  • மின்அட்டை
  • மடிகணினி
  • பஞ்சக்கும்மிகள் : நூல்
  • காட்சிப்படம்

பாட அறிமுகம் :

  • ஓடை குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • புயல் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • சந்த நயத்தோடு வாசித்தல்

மனவரைபடம் : ஓடை

மனவரைபடம் : கோணக்காத்துப் பாட்டு

தொகுத்தல்  : ஓடை

  • நன்செய்,புன்செய்க்கு நீர்வளம் – பயிர் செழித்தல் – உண மூலம் வறுமை போக்கல்.
  • ஓடையில் விளையாட ஆர்வம்,கல்லில் உருண்டு,நெழிந்து, தவழ்ந்து செல்லும் ஓடையில் நீந்த ஆசை, சலசல ஒலியினை எந்தப் பள்ளியில் படித்தாய் ஓடையே! நூல்களால் வருணிக்க முடியாத அழகு உன் அழகு.

தொகுத்தல்  : கோணக்காத்துப் பாட்டு

  • கடல் கப்பல் கவிழ்ந்தது.ஆர்க்காடு முதல் மைசூர் வரை சாலையில் நடக்கும் மக்கள் தடுமாற்றம்.
  • புயல் காற்றால் வீட்டுக் கூரைகள் பிரிந்து மொத்தமாகச் சரிந்தன. வாங்கல் ஊர் சிறப்பான தென்னம்பிள்ளை வீணானது.காங்கேய மேற்பகுதி பருத்திச் செடி சிதைதல்.
  • மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.வீட்டினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.தொண்டை நாட்டு மரங்கள் ஒடிந்தன.
  • கடல் கப்பல் கவிழ்ந்தது.ஆர்க்காடு முதல் மைசூர் வரை சாலையில் நடக்கும் மக்கள் தடுமாற்றம் அடைந்தனர்.
  • கொல்லி மலைச்சுற்றிப் புயல்.முருகா! இதை எப்படித் தாங்குவோம், துன்பம் தவிர்த்துக் காப்பாற்று.

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

  • ஓடையின் காட்சிகளை மடிகணினியில் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
  • புயல் சார்ந்த பிற பாடல்களை ஒலிப்பெருக்கி பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள் :

  • தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் யார்?
  • எதில் விளையாட கவிஞருக்கு ஆர்வம்?
  • வள்ளைப்பாட்டு என்றால் என்ன?
  • தென்னம்பிள்ளைகள் எங்கு வீணாயின?
  • பருத்திச்செடிகள் எங்குச் சிதைந்தன?
  • மரங்கள் எங்கு ஒடிந்து வீழ்ந்தன?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • ஓடையின் அழகு மற்றும் சிறப்பினை பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • புயலின் கொடுமைகளை இப்பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • வாணிதாசன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தொகுத்து எழுதிவரச்சொல்லல்.
  • நீவிர் அறிந்த புயல்களின் பெயர்களை எழுதிவரச் சொல்லல்.

Leave a Comment