CLASS – 8 TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)

CLASS – 8 TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)

பாடத்தலைப்பு :

இயல் 2 – உரைநடை உலகம் – நிலம் பொது

பாடத்தின் தன்மை :

நிலம் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

உரைப்பத்தியைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.

துணைக் கருவிகள் :

பொருத்தட்டை

விளக்கப்படம்

மடிகணினி

பாட அறிமுகம் :

நிலம் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

புதிய சொற்களை அடிக்கோடிடல் அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல் மையக்கருத்தை அறிதல் வாசித்தல்

மனவரைபடம் :

தொகுத்தல் :

ஊசியிலை,கடற்கரைகள்,பனித்துளிகள், பூச்சிவகைகள் மக்கள் நினைவில் வாழும் புனிதமானவை.நறுமணமிக்க மலர்கள் சகோதரிகள், மான்கள். குதிரைகள்,கழுகுகள் சகோதரர்கள். ஏரிகளில் இருக்கும் நினைவெச்சம் செவ்விந்தியர்களின் வாழ்வை நினைவு கூறுவன.நிலத்தை விற்பதும் வாங்குவதும் ஆடுகள் விற்பது போல, உங்கள் கோரப்பசி நிலத்தைப் பாழாக்கிவிடும். உங்கள் நகரங்களில் அமைதியான இடம் இல்லை.இலை ஓசை, பூச்சி ரீங்காரம் கேட்பதில்லை, காதைப் பிளக்கும் ஒலி தான் கேட்கின்றது. நிலம் பாட்டன் மார் எரிந்த சாம்பல், நிலம் தான் தாய் என்று நாங்கள் குழந்தைகளுக்குச் சொல்வது போல் சொல்லுங்கள். நீங்களும் சொல்லுங்கள் நாங்கள் நேசிப்பது போல நீங்களும் நிலத்தை நேசியுங்கள் என்று சியாட்டல் குமுறல் கருத்துகளைக் கடிதத்தில் வெளிப்படுத்துகிறார்.

வழங்குதல் :

மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல்  :

மடிகணினி மூலம் நிலங்களின் நிலையைப் பற்றிய குறும்படங்களைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :  

மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:

1. விலை கொடுத்து வாங்க இயலாதவை எவை?

2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

3. பழங்குடியினர்களின் தலைவர் யார்?

குறைதீர் கற்பித்தல் :

மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

சொல்வதை எழுதுதல்,

பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள்  :

பூமியை நேசிக்கும் மனிதர்களின் குமுறல்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

குறு வினா விடை மற்றும் சிறு வினா விடையை நன்கு படித்து வரச்சொல்லல்.

Leave a Comment