CLASS – 9 TAMIL LESSON PLAN FOR JULY 4TH WEEK (25.07.22 TO 29.07.22)
தலைப்பு :
இயல் 2 – கவிதைப்பேழை – புறநானூறு
பாடத்தின் தன்மை :
புறநானூறு மூலம் நீர்மேலாண்மை பற்றி அறிதல்.
முன்னறிவு (பாட அறிமுகம்) :
1. மரக்கன்று வைத்த அனுபவம் உண்டா?
2. பள்ளியைச் சுற்றி ஏதும் நீர்நிலை உள்ளதா? என வினவி புறநானூறு குறித்து அறிமுகம் செய்தல்
மன வரைபடம் :
கருத்துத் தூவானம் (தொகுத்தல்) :
நீர்நிலை பெருக்குவதன் அவசியம் பற்றித் தொகுத்துரைத்தல்,
விதைத்தல் (வழங்குதல்) :
‘வானுயர்ந்த மதில் கொண்ட வேந்தனே! நிலைத்த புகழ்பெறச் செய்வனவற்றைக் கூறுகிறேன். கேள் ! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது- உணவு தந்தவர் உயிர் தந்தவர். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் – உடலையும் உயிரையும் இணைத்தவர் ஆவர்- நீர் நிலை பெருக்கினால் நீடித்த புகழ் பெறலாம் ” எனக் குட்டிலவியனார் பாடலை விளக்குதல். “
விதைநெல் (வலுவூட்டுதல்) :
இயற்கைப் பாதுகாப்புக் குறித்து அறிதல்
விளைச்சல் (மதிப்பீடு ) :
உண்டி கொடுத்தோர் உயர் கொடுத்தோரே குறிப்புததுக
உணர்தல் (கற்றல் விளைவுகள்):
இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் மரம் வளர்ப்பின் தேவையையும் அறிதல்.
சங்கிலிப்பிணைப்பு (தொடர் பணி ) :
உணவாகும் மழை’ எனும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய
படத்தொகுப்பை உவாக்குக