How to Link Aadhaar Card with TANGEDCO E-Bill

மின் இணைப்பு எண்னுடன் ஆதார் கணக்கை இணைப்பது எப்படி

How to Link Aadhaar Card with TANGEDCO E-Bill

உங்களுடைய TNEB நுகர்வோர் இணைப்பு எண்னுடன் உங்கள் ஆதார் கணக்கை இன்னும் இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் உங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். TNEB கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் பில் பேமெண்ட் சரியாக செய்யப்படாமல் போகலாம். அனைத்து நுகர்வோர்களும் தங்களின் மானியத்தைப் பெறுவதற்கு அவர்களின் TNEB கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பதை TANGEDCO கட்டாயமாக்கியுள்ளது.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத நுகர்வோர்களிடமிருந்து தற்போதைய நுகர்வு கட்டணத்தை வசூலிக்க அலுவலகங்கள் மறுத்து வருகின்றன. எனவே உங்கள் ஆதார் அட்டையை TNEB உடன் இணைக்க நீங்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

How to Link Aadhaar Card with TANGEDCO E-Bill

ஆன்லைனில் TNEB உடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி?

  1. பயனர் TNEB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nsc.tnebltd.gov.in/adharupload/ ஐப் பார்வையிட வேண்டும்.
  2. ஆதார் இணைப்பிற்கான ஒரு படிவம் இருக்கும், அதில் உங்கள் TANGEDCO சேவை இணைப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.
  3. OTP ஐ உருவாக்குவதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த வேண்டும்.
  4. OTP ஐ உள்ளிட்டு உங்கள் TANGEDCO கணக்கைச் சரிபார்க்கவும்.
  5. குடியிருப்பவர்களின் விவரங்களை உள்ளிடவும்.
  6. TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
  7. ஆதாரில் உங்கள் பெயரை உள்ளிடவும்.
  8. உங்கள் ஆதார் ஐடியைப் பதிவேற்றவும்.
  9. படிவத்தைச் சமர்ப்பித்து, ஒப்புகை ரசீதைப் பதிவிறக்கவும்.

How to Link Aadhaar Card with TANGEDCO E-Bill

Leave a Comment