படிப்பதும் எழுதுவதும் – வெ. இறையன்பு
படித்ததை முறையாக அழகாக செம்மையாகத் தேர்வில் வெளிப்படுத்துவது
ஒருகலை
தேர்வுக்குப் படிப்பது என்பது ஒரு நிலை. படிப்பதை முறையாக, அழகாக, செம்மையாகத் தேர்வில் வெளிப்படுத்துவது என்பது அடுத்த நிலை; அது ஒரு கலை.
விடைகளை எழுதுவது என்பது வினாக்களைப் பொறுத்து அமைகிறது. வினாக்களைச் சரியாகப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே விடைகளை எழுதமுடியும்.
1. கையெழுத்து
விடைகளைத் திருத்துபவர் வாசிப்பதற்கு முன்பு, உங்களை அவருக்கு அறிமுகப்படுத்துவது உங்கள் கையெழுத்து – அழகான கையெழுத்து வாசிக்கிறவருடைய சிரமத்தைக் குறைக்கிறது. தார் ரோட்டில் வாகனத்தைச் செலுத்துவதுபோல் அது இலகுவாக இருக்கிறது. அதனால் தான் கையெழுத்து அழகாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கின்றன. சீரான கையெழுத்து. வாக்கியங்களுக்குச் சரியான இடைவெளி அதிகம் அடித்தல் திருத்தல் இல்லாமை, இரண்டு சொற்களுக்கு இடையில் சரியான இடைவெளி – என்று இருக்கிற விடைத்தாளைப் பார்த்தவுடன் திருத்துபவர் மதிப்பீட்டில் நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள் என்பதை உணர வேண்டும்.
2. தலைப்புகள்
நீளமான விடைகளை எழுதும் போது சிறுசிறு துணைத் தலைப்புகள் கொடுத்தோ, பத்திகளாக எழுதுவதோ நல்லது அப்போது தான் வாசித்துத் திருத்துகிறவர்களுக்கு அலுக்காமல் இருக்கும்.
பல நேரங்களில் திருத்துபவர்கள் தலைப்புகளைப் பார்த்தே. உங்கள் புரிந்து கொள்ளலின் ஆழத்தை உணர்ந்து உங்களுக்கு முழு மதிப்பெண்ணைக் கொடுத்துவிடுவர்.
3. நிறைய எழுதுவதா?
பலர், நிறைய எழுதுவதுதான் சிறந்த விடை என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு வினாவிற்கும் எவ்வளவு தேவையோ அது மட்டுமே விடையாக இருக்க வேண்டும். நமக்குத் தெரிந்ததையெல்லாம் எழுதி நம்முடைய மேதைமையை வெளிப்படுத்த வேண்டியதில்லை. விடையின் நீளம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்தும் அமைய வேண்டும்.
உதாரணமாக : தென்னிந்திய நதிகளுக்கும் வட இந்திய நதிகளுக்கும் என்ன வேறுபாடுகள்? – என்கிற கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்குமேயானால் விடையைக் கீழ்க்கண்டவாறு அமைக்கலாம்.
வடஇந்திய நதிகள்
1. வற்றாதவை –
2. வட இந்திய நதிகள் சமவெளிகளில் ஓடும் தன்மையை உடையவை
பருவகாலத்தில் மட்டுமே வற்றாமலிருப்பவை.
தென்னிந்திய நதிகள்
1.பருவகாலத்தில் மட்டுமே வற்றாமலிருப்பவை.
2. மலைப்பகுதிகளில் ஓடுவதால் அவை நிறைய நீர்வீழ்ச்சிகளையும்,
அருவிகளையும் உள்ளடக்கியவையாக இருக்கின்றன.
இதே கேள்விக்குப் பத்து மதிப்பெண்கள் ஒரு வேளை ஒதுக்கப்படுமேயானால் அதற்குப் பின்வருமாறு விடையளிக்கலாம்
வட இந்திய நதிகள்
1. பெரும்பாலும் இமயமலைச் சாரலில் பனிப் பிரதேசங்களில் உற்பத்தியாகின்றன.
2. வற்றாத ஜீவநதிகளாக உள்ளன.
3. அதிக நீளமும், அகலமும் கொண்டு கங்கை சமவெளிப் பகுதி முழுமையும்
வளப்படுத்துகின்றன.
4. நீர் வழிப் போக்குவரத்துக்கு ஏற்றவையாக இருக்கின்றன
5. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் பருவமழையின் போது ஆண்டுதோறும் ஏற்படுகிறது.
6. ஏரிப்பாசனத்திற்குப் பதிலாக அணைகளும் கால்வாய்களும் அதிகம்.
7. நிறைய உபரிநீர் ஆண்டு தோறும் வீணாகிக் கடலில் விழுகிறது.
7. உபரிநீர் நல்ல முறையில் உபயோகப்படுத்தப்படுகிறது.
8. நதிநீர்ப் பிரச்சினைகள் குறைவாக உள்ளன.
9. மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைகள் இல்லை .
10. உலகில் மிகச் செழிப்பான சமவெளிகள் உள்ளன.
தென்னிந்திய நதிகள்
1. மேற்கு மலைத்தொடர்ச்சாரலில் பெரும்பாலும் உற்பத்தியாகின்றன.
2. பருவ காலத்தில் மட்டுமே வற்றாமலிருக்கின்றன.
3. குறைந்த ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.
4. மேடுபள்ளம் உள்ள பகுதியாக இருப்பதால் நீர்வழிப் போக்குவரத்துக்கு உகந்தவையல்ல.
5. வெள்ளப்பெருக்கு எப்போதாவது நிகழ்கின்ற ஒன்றாகும்.
6. பருவகாலங்களில் மட்டுமே அதிகமாக ஓடுவதால் ஏரிப்பாசனம் மூலம் நீர்ப்பாசனம் செய்யும் முறை அதிகமாக உள்ளன.
7. உபரிநீர் நல்ல முறையில் உபயோகப்படுத்தப்படுகிறது.
8. நதிநீர்ப் பிரச்சினைகள் அதிகம் உள்ளன.
9. நிறைய உள்ளன – தீர்ப்பாயங்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன.
10. அவ்வாறு கூறும் சமவெளிகள் சமவெளிகள் ஏதும் இல்லை .
நாம் எழுதுகிற விடைகள் தெளிவாகவும், முறையாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். தேவையில்லாத செய்திகளை எழுதுவது, திருத்துபவருக்குக் கோபத்தையே விளைவிக்கும்.
ஒரே பொருளைக் குறிக்கும் நிறைய சொற்களைப் போடுவதோ , அல்லது ஒரே வாக்கியத்தை வேறுவேறு மாதிரி சுழற்றிச் சுழற்றி எழுதுவதோ எந்தப் பயனையும் விளைவிக்காது.
குறைவான சொற்களில் குறைவான பொருளைத் தரும்படி நாம் விடையை வடிவமைக்க வேண்டும். எழுதுகிற போது சீராக எழுதாமல், நிறைய அம்புக்குறிகளைப் போட்டு திருத்துபவரை வெறுப்பேற்றக் கூடாது. உடுத்தும்போது உறுத்தாத செருப்பே சிறந்த செருப்பு. திருத்தும் போது நெருடாத விடையே சிறந்த விடை.
அடிக்கோடு இடுதல்
எழுதும் போது முக்கியமான பதங்களை அடிக்கோடு இட்டு எழுதுவது நல்லது. முக்கியமான பெயர்கள், முக்கியமான வருடங்கள், போன்றவற்றை அடிக்கோடு இட்டு எழுதுவதன் மூலம் வாசிப்பவர் விழிகளுக்குக் குறைந்த வேலையைத் தருகிறோம். எத்தனை தாள்கள் எழுதினோம் என்பது தேர்வின் வெற்றியை நிர்ணயிக்கப் போவதில்லை. எத்தனை செறிவாக நாம் எழுதியிருக்கிறோம் என்பதுதான் தேர்வின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
படித்ததையெல்லாம் எழுதவேண்டியதில்லை
நமக்குத் தெரிந்த ஒரு கேள்வி வந்துவிட்டது என்று சொன்னால், சில மாணவர்களுக்குக் குஷி கிளம்பிவிடும் – தங்கள் பாண்டித்யத்தை எல்லாம் அந்தக் கேள்விக்கான விடை எழுதுவதிலேயே காண்பித்துவிட வேண்டும் என்கிற அவாக துடிப்பு, காலநேரத்தையெல்லாம் மீறி அதில் ஈடுபட வைத்துவிடும். ஒரே கேள்விக்கு அதிக நேரம் செலவழித்துவிட்டுப் பின்பு மற்ற கேள்விகளுக்கு விடையெழுதுவதற்கு நேரமில்லாமல் அவதிப்படுவார்கள். எனவே தேவையானதைச் சுருக்கமாக, அழகாக எழுத வேண்டும்.
படங்கள், கிராஃப்கள், புள்ளிவிவரங்கள்
அறிவியல் சம்பந்தமான விடைகளுக்கு , நிறையப்படங்கள் (Diagrams) வரைய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே, விடையைப் படங்கள் என்னும் ஸ்டாண்டில் மாட்டுவது அத்தியாவசியமாகிறது. எனவே நிறைய படங்கள் போடுவது நமக்கு இருக்கின்ற புரிந்து கொள்ளுதலைத் தெளிவுபடுத்தவும், அதே நேரத்தில் எளிதில் நம்மை வெளிப்படுத்தவும் உதவுகிறது. படங்களை அழகாகவும் தெளிவாகவும் விடைத்தாளின் வலது பக்கத்தில் வரைவது நல்லது. பொருளாதாரம், போன்ற படங்களுக்கு கிராஃப் (Graph) முதலியவற்றை வரைவது அவசியம். நேரத்தைச் சேமிக்கவும். ஒரு கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அவை உதவுகின்றன.
புள்ளிவிவரங்களைத் தேவையான இடங்களில் நாம் உபயோகிக்க வேண்டும்; அதோடு எந்த மூலத்திலிருந்து அவற்றை உபயோகிக்கிறோம் என்பதையும் நாம் கூற வேண்டும்.
மேற்கோள்கள்
மொழிப்பாடங்களில் மேற்கோள்களை நாம் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படிக் கையாளும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையோடு அவற்றைக் கையாள வேண்டும். அளவுக்கதிகமான மேற்கோள்கள் நம் சொந்தக் கருத்தை அமுக்கிவிடக் கூடாது. தவறான மேற்கோள்களைக் காட்டக் கூடாது. எல்லோருக்கும் தெரிந்த பரிச்சயமானவர்களுடைய அறிஞர்களுடைய மேற்கோள்களைத்தான் நாம் காட்டவேண்டும். பக்கத்து வீட்டுக்காரரை மேற்கோள் காட்டமுடியாது. உரைநடைப் பாடங்களில் கவிதையை மேற்கோள் காட்ட முடியாது. தமிழ்ப்பாடத்தில் ஆங்கில மேற்கோளைப் பயன்படுத்த முடியாது . அடித்தல், திருத்தல்
எண்ணத்தில் தெளிவும், உறுதியும் இருப்பவர்கள் அதிக அடித்தல், திருத்தல் இல்லாமல் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கையெழுத்தை வைத்து ஒருவன் மனநிலையைக் கூற முடியும். கணிதம் போன்ற பாடங்களில் வரிசை வாரியாக (Step by step) விடைகளை எழுத முற்பட்டால் இறுதி விடை தவறாக இருந்தாலும் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும். விடைத்தாள் முழுவதும் ஓர் ஒழுங்குத் தன்மையில் (Orgen unity) இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
நேராக எழுதுதல்
வெள்ளைத்தாளில் நேராக எழுதுவது என்பது நல்ல பழக்கம். சிலர் கையெழுத்து. வாசிப்பவர்களைக் குழப்புகின்ற அளவிற்கு கோணல் மாணலாக இருக்கும்.
தேர்வுக்கு எடுத்துச் செல்லும் சாதனங்கள்
தேர்வுக்கு எடுத்துச் செல்லும் சாதனங்களை நாம் முறையாக எடுத்துக் கொண்டு போகவேண்டும். தேர்வு அறையில் மற்றவர்களிடமிருந்து இரவல் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒழுகாத பேனாக்கள் – மை நிரப்பப்பட்ட எழுதுகோல்கள். பென்சில், ரப்பர், அடிக்கோல் போன்ற அனைத்துடன் நுழைவுச் சீட்டு (Hall Ticket) போன்ற அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வுக்கு முன் மனத்தயாரிப்பு
- தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு படிப்பதை நிறுத்துங்கள்.
- கடைசி நேரப் படிப்பு என்பது குழப்பத்தையே விளைவிக்கும்
- மற்றவர்களுடன் கலந்து பேசாமல் தனிமையைத் கடைப்பிடியுங்கள்.
- மற்றவர்கள் கட்டாயம் இந்தக் கேள்வி தேர்வில் வரும் என்று சொல்வதைக் கேட்டுக் குழப்பமடையாதீர்கள்.
- கண்களை மூடி அமைதிப்படுத்துங்கள்
- எல்லாம் மறந்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்துக் குழம்பாதீர்கள்
- நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள் – சீரான மூச்சு உங்களை தைரியப்படுத்தும்; உற்சாகப்படுத்தும்; நீங்கள் தெளிவுடன் இருக்கலாம்.
- தேர்வு அறைக்கு அரை மணிநேரம் முன்னதாகவே சென்று
- அமர்ந்து உங்கள் சாதனங்களை வரிசைப்படுத்துங்கள்.
- நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று எண்ணித் தேர்வை எழுதத் தொடங்குங்கள்.
DOWNLOAD PDF – Click Here